1976 ஆம் ஆண்டு திரு.சங்கரலிங்கம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டு ஒரு வருடத்திற்குள் பாடசாலை கீதம் வடிவம் பெற்றது.

இக் கீதம் வடிவம் பெற திரு. S.T. கனகலிங்கம், Dr. வேலாயுதபிள்ளை, மகேசன், M. பாலசுப்ரமணியம் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருந்த திரு. வீரமணி ஐயரை வைத்து எழுதப்பட்டது.

பல்லவி

வாழ்த்துவோம் வணங்குவோம்
வானளாவும் புகழோங்க

அனுபல்லவி

கொழும்பமர் இந்துக் கல்லூரி
செழுந்தமிழ் மலரின் நியமமதனை

வாழ்த்துவோம் வணங்குவோம்
வானளாவும் புகழோங்க

சரணம்

ஞான முடிவில் அறந்தரு வள்ளுவன்
கான நடம் கூத்துக் காட்டும் இளங்கோ
மோன முத்தமிழ் வித்தகர் கம்பர்
தேனிசை பாரதி சேர்ந்தியல் நியமத்தை

வாழ்த்துவோம் வணங்குவோம்
வானளாவும் புகழோங்க